முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து விரைவான தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Date:

கொழும்பு  மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை, போதிய இடவசதி மற்றும் வகுப்பறைகள் இல்லாமை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இல்லாமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அமர்வின் போது அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமளித்தனர்.
குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்தார்.
ஏறக்குறைய 40,000 மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி பெறுவதுடன், சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முஸ்லிம் மாணவர்களின் பற்றாக்குறையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்த அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் சுமார் 19 முஸ்லிம் பாடசாலைகளும் களுத்துறையில் 70 பாடசாலைகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொழும்பின் சில பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லாததால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சில பாடசாலைகளை பொருத்தமான காணிகளுக்கு இடமாற்றுவதற்கான தெரிவுகளை ஆராயுமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...