அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
‘அன்புடன் வரவேற்கிறோம், இப்ராஹிம் ரைசி மத்திய கிழக்கின் சிங்கம், இலங்கைக்கான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.