விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Date:

விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும்,   சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் தடை விதித்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார். அதையடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...