மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் தேசியச் சின்னமாக உயர்ந்தவர்: தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹஸன் மௌலானாவுக்கு இஸ்லாமிய ஐக்கியப் பேரவை வாழ்த்து

Date:

நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வ மதத் தலைவர்களில் இஸ்லாம் மதத்தைப் பிரதிநிதித்துப்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஸ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு இஸ்லாமிய ஐக்கியப் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவராக முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கடுமையாக உழைத்து வரும் நிலையில், நாட்டின் இனங்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளராக தேசிய அளவில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது அவரது ஒற்றுமை முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும் எனவும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின் மூலம் தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளராக நாடுமுழுவதும் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இலங்கை தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் சம தலைவராகக் கடந்த பல வருடங்களாகக் கடமையாற்றி வரும் இவர், ஏனைய எல்லா மதத் தலைவர்களுடனும் இணைந்து நாட்டில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அருந்தொண்டு புரிந்து வருகின்றார்.

முஸ்லிம் சமூகத்தின் அனைத்து தரப்பினருடனும் மட்டுமல்லாது ஏனைய சமூகங்களுடனும் பேதங்களுக்கு அப்பால் நல்லுறவைப் பேணி வரும் கலாநிதி ஹஸன் மௌலானா இலங்கை ஜனாதிபதியின் இஸ்லாம் மத விவகார ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை வைத்து முஸ்லிம் சமூகம் கொச்சைப்படுத்தப்படும் போதெல்லாம் நாட்டின் தலைமைகளுக்கு ஸஹ்ரானிஸம் என தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை முஸ்லிம் சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவர் அரும்பணியாற்றியுள்ளார்.

மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் அவரது சேவைகளை மெச்சும் விதத்தில், ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையின் (UNPAF) அங்கத்தவராக ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையின் தெற்காசியப் பிராந்திய சமாதானத் தூதுவர் பேராசிரியர் ஜி. ஜெகப் ஸைமனினால் சான்றிதழ் வழங்கி நியமிக்கப்பட்டார்.

20 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இவர் மேற்கொண்டு வரும் முயற்சியைப் பாராட்டும் வகையில் தமிழ் சமூக அபிவிருத்திப் பேரவை கலாநிதி ஹஸன் மௌலானாவுக்கு அண்மையில் கௌரவ சமாதான விருது வழங்கி கௌரவித்திருந்தது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...