ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை  (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது  கவனம் செலுத்தப்பட்டதுடன்,  அது தொடர்பில்  பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன்,  அதற்கு சார்க் நாடுகளின் ஆதரவைப் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சார்க் கலாச்சார மையத்தை மொடர்ன் ஆர்டிற்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்து  கொண்டனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...