கடந்த 8 மாதங்களாக மனிதாபிமானமற்ற யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் பல தொந்தரவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த பலஸ்தீனிய காசா மக்கள் குறிப்பாக அவர்களுடைய சிறுவர்கள் யுத்த சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய பல நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவதை அடிக்கடி ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.
அந்தவகையில் இந்நாட்களில் பல இலட்சம் பேர் மக்காவுக்குச் சென்று அவர்களுடைய ஹஜ் கடமையினை நிறைவேற்றி வருகின்ற நிலையில் அந்த புனிதமான இடத்துக்கு செல்ல முடியாத அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காசா சிறுவர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதைப்போல் ஒரு நிகழ்விலே கலந்துகொள்கின்ற காட்சி மிக நெகிழ்வாக உள்ளது.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட காசா சிறுவர்கள் ஹஜ் சடங்கு பற்றிய மத அறிவை பரப்புவதையும் நடந்து கொண்டிருக்கும் போருக்கு மத்தியில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இதனை ஏற்பாடு செய்ததாகவும் ஹஜ்ஜின் படிநிலைகள் மற்றும் சடங்குகளை ஆரம்பம் முதல் இறுதி வரை குழந்தைகளுக்குக் காட்டி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்து அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த விளைகின்றோம் எனவும் கூறினர்.