சவூதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள்: இலங்கையில் நாளை

Date:

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று (16) உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன்  கொண்டாடுகின்றனர்.

‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.

அந்தவகையில் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்,  ஜோர்டான், சிரியா, ஏமன், குவைத், ஆஸ்திரேலியா, ஓமன், கென்யா மற்றும் ஈராக் உட்பட ஏனைய நாடுகளிலும் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும்   இந்த புனித நாளிற்கான சிறப்புத் தொழுகைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் 40,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  இன்று அதிகாலை ஈத் அல்-அதா தொழுகையை நிறைவேற்றினர்..
சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவிற்கு அருகே ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அரபாத் மலையில் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
அவுஸ்திரேலியாவில்..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..
மாஸ்கோவில் உள்ள கதீட்ரல் பள்ளிவாசலில்….
ஈராக், பாஸ்ராவில்,   காலை தொழுகைக்குப் பிறகு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈத் உல் அதா கொண்டாட்டத்தின் போது,
காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், அல்-ரஹ்மா மசூதியின் இடிபாடுகளில் முஸ்லிம்கள் காலை பிரார்த்தனை செய்கிறார்கள்…
இதேவேளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை நாளை 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடவுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...