முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இலங்கை திட்டம்

Date:

இலங்கைக்கும் (Sri Lanka) சவூதி அரேபியாவிற்கும் (Saudi Arabia) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் (Riyadh) நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் போது, முதலீடு குறித்து முக்கிய கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயற்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டினை திறமையான செயல்முறைகளுக்கு அமைய முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...