மத்திய வங்கிக்கு துணை ஆளுநராக தாசிம் நியமனம்

Date:

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம்  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோர் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய துணை ஆளுநர்கள் முறையே ஜூன் 20 மற்றும் ஜூன் 24 முதல் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கி ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டபடி, நிதி அமைச்சரினால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏ. ஏ.எம்.தாசிம் இலங்கை மத்திய வங்கியில் (CBSL) 31 வருடங்களுக்கும் மேலாக வங்கி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலில் சேவையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...