அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் பி.ப. 2.00 மணிக்கு தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்பு டகுத் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் திறமைகளைக் காட்டிய கிளைச் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்குதல், தேசிய மாவட்டத்தில் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருது வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியச் செயலாளர் ஆசிப் சுக்ரி தெரிவித்துள்ளார்