பலஸ்தீன் அல் அக்ஸா இமாம் அவர்களால் அல்முபாரக் பாடசாலையின் ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு!

Date:

களனி கங்கையை ஊடறுத்துச் செல்லும் நகரமான மள்வானையில் அல்முபாரக் பாடசாலை அமையப் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்ற இப்பாடசாலை அதற்கான ஆசிரியர் விடுதியை அமைத்துக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பை பெற்று தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

55 மில்லியன் ரூபா செலவில் பிரபல கொடைவள்ளல் கலாநிதி  பௌஸ் அல்ஜிப்ரி அவர்களுடைய முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த ஆசிரியர் விடுதி ஜூன் 25ம் திகதி மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆசிரியர் விடுதி திறப்பு விழா, பாடசாலை அதிபர் முஹம்மத் நயீம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றதோடு சமய, சமூக மற்றும் அரசியல் தலைவர்களும் இவ் விழாவில் கலந்துகொண்டார்கள்.

குறிப்பாக பலஸ்தீனத்தில் அமைந்துள்ள புனித பள்ளிவாசலான அல்அக்ஸா இமாம்களில் ஒருவரான அலி அப்பாஸி அவர்களும் ஜனாதிபதியின் ஆலோசகரான ருவன் விஜேவர்த்தன , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் , ஓய்வுபெற்ற நீதியரசர் அப்துல் கபூர் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டணர்.

இந்த ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மள்வானைக்கு வந்தபோது இடம்பெற்ற நிலையில், 9மாத காலப்பகுதியில் இக் கட்டட வேலைகள் முழுமை பெற்று திறந்துவைக்கப்பட்டிருப்பது முக்கிய ஒரு நிகழ்வாகும்.

இவ் வைவத்தில் கலாநிதி பௌஸ் அல் ஜிப்ரி அவர்களும் கலாநிதி ஹிஸ்புல்லா அவர்களும் பாடசாலை சமூகத்தினால், அவர்கள் செய்கின்ற பல்வேறு சமூகப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...