குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

Date:

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன் அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் குறித்த நிலை இலங்கையிலிருந்து விலகி பயணித்து கட்டம் கட்டமாக வலுவிழக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவும் மழைகொண்ட வானிலை எதிர்வரும் 2 நாட்களுக்கு நீடிக்குமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...