சம்பந்தனின் மறைவுக்கு அரசியல் பிரதிநிதிகள் இரங்கல்: இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு

Date:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு தனது 91ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில், சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சம்பந்தன் எனது பழைய நண்பர். நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களை குறித்து கலந்துரையாடியுள்ளோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பாகும்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலை கூற விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரின் பூதவுடல் அஞ்சலிக்காகக் கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேலும், அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...