இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் ஆழ்ந்த அனுதாபம்!

Date:

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாததொன்று என அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை அரசியலில் அனுபவரீதியான அரசியல்வாதி மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் துணிந்து தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒருவராக இருந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கை அரசியலிலும் தமிழ் மக்களின் அரசியலிலும் குறிப்பாக இரா சம்பந்தன் என்கின்ற பெயர் மிகவும் பிரபலமான தொன்று, அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் துணிந்து எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய திறமை கொண்ட ஒருவராக  இருந்துள்ளார்.

அன்னாரது இழப்பு தமிழ் மக்களது அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்ட அவர் அவரது இழப்பால் வேதனையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...