டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழப்பு

Date:

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்,

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் எனவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும்,

இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...