காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!

Date:

பலஸ்தீன நகரமான காசாவின்  பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டுள்ளதுடன், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னதாக மற்றொரு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...