பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் பாரியளவில் வியாபித்துள்ளதால்,அமைதியைக் கொண்டுவருவதற்கு உரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் உயிர்களையும் அரசாங்க உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல்கலைகழகங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பங்களாதேஷிற்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
மாணவர்களின் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.