போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது: பதிலடிக்கு காத்திருங்கள்; ஹிஸ்புல்லா தலைவர்

Date:

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாத் ஷோகோர் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோரின் கொலைகளுக்குப் பிறகு இஸ்ரேலுடனான போர் “புதிய கட்டத்தில்” நுழைந்துள்ளதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் நடைபெறுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.இந்த இரங்கல் கூட்டத்திலே ஹிஸ்புல்லா தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இஸ்மாயில் ஹனியாவின் தியாகத்திற்காக ஹமாஸின் தலைமைக்கு எனது இரங்கலையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,

அன்புள்ள தியாகிகளின்  குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர், மூத்த தளபதி ஃபுவாட் ஷோக்ரை படுகொலை செய்வதே எதிரியின் முக்கிய இலக்காக இருந்தது.

எதிரியும், எதிரிக்குப் பின்னால் இருப்பவர்களும், நமது தவிர்க்க முடியாத பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்”” இனிமேல் எந்த விவாதமும் இல்லை. எங்களுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பது பகல், இரவுகள் மற்றும் போர்க்களம் மட்டுமே” என்று நஸ்ரல்லா இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதை அடுத்து நிலைமை மீண்டும் மோசமடைவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...