Online Visa மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

Date:

“நிகழ்நிலை விசா” (Online Visa) வழங்குவதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால் இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய  தெரிவித்துள்ளார்.

இடைக்கால உத்தரவு காரணமாக விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளாததால், எதிர்கால நடவடிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் படி, எதிர்வரும் திங்கட்கிழமை விசா வழங்குவது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் நற்பெயருக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...