புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதால் மு. கா.உயர்பீட கூட்டத்திலிருந்து பிரதிப் பொருளாலர் யஹியாகான் வெளியேற்றம்!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்,  யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமையால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,  அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...