இலங்கையின் முதல் பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்

Date:

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாக சுமனா நெல்லம்பிட்டிய கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய ஆவார்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...