நித்திரையின்றி தவிக்கும் குழந்தைகள்: ஆய்வில் தகவல்

Date:

நாட்டில் குழந்தைகள் இடையே தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை சிறுவர்கள் மத்தியில் தூக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு ஒரு வருட வயதிற்குள் தூக்கமின்மை பிரச்சினைகள் உள்ளன.

மேலும், இளமைப் பருவத்திலும் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களிலும் தூக்கமின்மையின் விளைவுகள் உள்ளன.

 

இலங்கையில் கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் கூட மக்களின் தூக்கத்தில் சில பிரச்சனைகள் இருப்பதைக் காட்டுகிறது. இதேவேளை, ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக டொக்டர் இனோகா விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இதன்படி “பிறந்த மூன்று மாதங்களில், பிள்ளைகள் சுமார் 14-17 மணி நேரம் தூங்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள் உள்ளன.

4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை, 11 முதல் 14 மணி நேரம், 3 வருடங்கள் முதல் 5 வயது வரை 10 முதல் 13 மணி நேரம் வரை 5 வயதுக்குட்பட்ட 50% குழந்தைகள் தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக குறைந்தபட்சம் 7 மணிநேரம் தூங்க வேண்டும்.

 

 

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...