ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரினதும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க தீர்மானம் எட்டப்படவுள்ளது.
2020 பொதுத் தேர்தலில் காலி (Galle) மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.
இதேவேளை, ஹரின் பெர்னாண்டோவினால் (Harin Fernando) வெற்றிடமாகவுள்ள ஆசனத்தை நிரப்புவதற்கான உறுப்பினர் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.