தேர்தல் ஆணைக்குழுவின் போலி இணையத்தளம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பாக 5 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெப்ரல் அமைப்புக்கு இதுவரை 68க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று  உருவாக்கப்பட்டுள்ள போலியான இணையதளம் தொடர்பாக விசாரணை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம்  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...