குறிப்பு: (பங்களாதேஷில் சர்வாதிகார ஆட்சி புரிந்த ஷேக் ஹசீனாவுடைய ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பலர் தற்போது விடுதலை பெற்று வருகின்றனர். அவர்களில் முன்னாள் இராணுவ ஜெனரல்களில் ஒருவரான அமான் அஸ்மி அவர்களும் ஒருவர். விடுதலையின் பின்னால் அவர் பற்றிய ஒரு செய்தியை வாசகர்களுடன் பகிரந்து கொள்கின்றோம். )
ஜெனரல் அமான் அஸ்மி பங்களாதேஷ் இராணுவத்தில் கடமையாற்றிய ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி, அவர் பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவராக இருந்து 2016ஆம் ஆண்டு சிறைச்சாலையிலே மரணத்தை தழுவிய குலாம் ஆசம் அவர்களுடைய மகனாவார்.
ஷேக் ஹசீனாவுடைய அரசு ஜெனரல் அசாம் அஸ்மி அவர்களை பதவி நீக்கம் செய்து, கடத்திச் சென்று அவர் இருக்கின்ற இடமே தெரியாதளவுக்கு மறைத்து வைத்திருந்தது.
2016ஆம் ஆண்டு இந்த நிகழ்வு இடம்பெறறது.
இத்தனைக்கும் இவர் சிறைச்சாலையில் மரணித்த தனது தந்தைக்காக நீதி கோரி குரல் எழுப்பியதும் ஜமா அத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவருடைய மகனாக இருந்ததும் தான் இத்தகைய அநீதியான நிலைக்கு காரணமாகும்.
ஜெனரல் அமான் அஷ்மி பாதாளச் சிறையிலே “ஐன்கோர்” என்ற (கண்ணாடி இல்லம்) சிறைச்சாலையில் 8 வருடங்கள் கழித்துள்ளார்.
இதில் தடுத்து வைக்கப்படும் ஒருவர் தன்னுடைய முகத்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். வேறு எதனையும் பார்ப்பதற்கான வசதிகளோ வாய்ப்புக்களோ கிடைக்காது.
தன்னந்தனியாக சிறைச்சாலையில் தன்னுடைய வாழ்நாளை கழித்த அமான் அஸ்மி, எந்தவொரு சூரிய ஒளியையும் 8 வருடங்களாக காணாத நிலையில், தொழுகைக்கான பாங்கு ஓசையை முற்று முழுதாக கேட்கவே வாய்ப்பில்லாத நிலையில் 8 வருடங்களையும் கழித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தன்னுடைய குடும்பத்தவர்களை சந்திப்பதற்கோ அல்லது அவருடைய குடும்பத்தவர்களின் மரணச்செய்தியையோ அல்லது வேறு நல்ல செய்திகளையோ கேட்டு அறிந்து கொள்ளவோ வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
இத்தகைய கொடுமைகளை அனுபவித்த நிலையில் தான், புரட்சியை தொடர்ந்து ஜெனரல் அமான் அஸ்மி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இப்போது தனது குடும்பத்துடன் இணைந்திருக்கின்றார் என்பது ஒரு மகிழ்ச்சியாக விடயம்.
கடந்த 8 வருட காலத்தில் இவரது தாய் மரணித்துள்ளார். அவர் மரணமணான செய்தியை மரணித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகே தெரியப்படுத்தியுள்ளனர். அதேபோல அவரது மற்றொரு மகனும் மரணித்திருக்கிறார்.
அவருடைய மனைவியும் 7 வருடகாலமாக இவரைப்பற்றிய எந்த விதமான செய்திகளும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற தீர்மானத்துக்கு வந்து வேறு ஒருவரை திருணம் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
விடுதலை பெற்று வெளியே வந்து பார்க்கும் போது தனது மனைவி வேறொரு நபரை திருமணம் முடித்து வாழ்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
விடுதலையின் பின் ஜெனரல் அமான் அஸ்மி கூறிய வார்த்தைகள் கண்கலங்க வைக்கின்றன. ‘நான் இவ்வளவு காலங்கள் வரை எந்தவிதமான காற்றையும் ஒளியையும் அனுபவிக்காமல் இருந்திருக்கின்றேன்.
அல்லாஹ்வுடைய அந்த உண்மையான உலகத்தை பார்க்கின்ற பாக்கியம் 8 வருடங்களாக எனக்கு கிடைக்கவில்லை. அதான் சொல்கின்ற சப்தம் என் காதுகளை எட்டவில்லை. நான் 8 ஆண்டு காலமாக வடித்த கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படுமானால் ஒரு கண்ணீர் கடலே உருவாகிவிடும்” என்று தான் அனுபவித்த வேதனைகள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.