ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி

Date:

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்  மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டம் மீறல் மற்றும் வன்முறை தொடர்பில் நேற்றைய தினம் 51 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 25 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 26 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...