கல்லொழுவை கடை தெருவில் தீ விபத்து: விசாரணைகள் முன்னெடுப்பு

Date:

மினுவாங்கொடை கல்லொழுவை  பகுதியில்  நேற்று (11) வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடை ஒன்றில் தீ விபத்து  ஏற்பட்டது.

தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து விபத்து தானாக ஏற்பட்டதா அல்லது மின்சார கோளாறால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் வர்த்தகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(ஏ.சி பௌசுல் அலிம்)

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...