கள்எலிய அரபுக்கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்.

Date:

1959 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களுக்காக கட்டாய பாடசாலைக் கல்வியுடன் அரபு மொழி மற்றும் சன்மார்க்க கல்வியை கற்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கள்எலிய பெண்கள் அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அறிவுறுத்த இலங்கை வக்பு சபை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தவகையில் கல்லூரிக்கு சொந்தமான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்களின் விபரங்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர்,  இல. 180, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  என்ற முகவரிக்கோ அல்லது director@muslimaffairs.gov.lk என்ற  மின்னஞ்சல் முகவரிக்கும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் அளிப்பவர் குறித்த எந்த தகவலும் வெளியிடப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...