32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்: நாளையுடன் நிறைவு

Date:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16  வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தல் நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறும். அத்துடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் , எம் திலகராஜா,பா.அரியநேத்திரன்,  ஆகியோர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளதுடன்,ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மொஹமட் இன்பாஸ் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.இதற்கமைய கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் நாளையும்,நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக  புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில்  ஏ.எஸ்.பி.லியககேவும்,   ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்  சஜித் பிரேமதாசவும்,  தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில்  எஸ்.கே.பண்டாரநாயக்கவும்,   தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும்,  ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய  சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், மற்றும்   ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும்,  தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன, நவ சமசமாஜக் கட்சி சார்பில் பிரியந்த புஸ்பகுமாரவும், எங்கள் மக்கள் சக்தி சார்பில் ஜே.டீ.கே.விக்கிரமரத்ன, இலங்கை சமசமாஜக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே,ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் மொஹமட் இன்பாஸ் , ஜனநாயக  ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அனோஜ  டி சில்வா ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை  சுயேட்சை வேட்பாளர்களாக  ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்னஈ அக்மீமன தயாரத்ன தேரர் , சிறிபால அமரசிங்க , சரத் பொன்சேகா,  அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ்,  மானகே பேமசிறி, அனுர சிட்னி ஜயவர்தன, டீ.எம்.பண்டாரநாயக்க, எம்.திலகராஜா, ரொஷான் ரணசிங்க,பா.அரியநேத்திரன்,  ஆகியோர்  கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...