தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலான சமூக ஊடக பதிவுகள் நீக்கப்படும்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

Date:

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.

தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் youtube, Facebook, Tiktok, instagram, Whatsapp உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அதிகாரிகளுடன், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...