#Back to Glory: சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து அவதானம்!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்திலும் இதுபற்றி கலந்துரையாடப்பட உள்ளது.

இவ்வாறான கருத்துக்கணிப்புக்களால், சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில், தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தியும் வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை இரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...