நாட்டில் பொது ஒழுங்கைப் பேண ஆயுத படைகளுக்கு அழைப்பு

Date:

நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மாவட்டங்களில் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும்  அத்தகைய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பிராந்திய நீரைப் பராமரிப்பதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவம்,  கடற்படை மற்றும் விமானப் படைகளை அனுப்புவதற்கு வர்த்தமானி வழிவகுக்கின்றது.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...