ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் புத்தளம் வரவேண்டாம் என ஆர்ப்பாட்டம்!

Date:

ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம் – பாலாவி ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக ஜூம்ஆ தொழுகையை அடுத்து வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, “துரோகிகளே புத்தளம் வராதே”, “துரோகிகளே புத்தளம் எமது புனித பூமி அதனை கலங்கப்படுத்தாதே”, “ஜனாஸா எரிப்புக்களுக்கு ஆதரவு வழங்கிய துரோகிகளே எமது மண்ணை மிதிக்காதே” இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக காட்டிக் கொடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று ரணில் ராஜபக்‌ஷ அரசுக்கு சோரம் போயுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

புத்தளம் என்பது புனித பூமியாகும். இங்கு வாழும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே, உங்கள் வருகையால் இந்த மக்களின் ஒற்றுமை சீர்குலையும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

வங்கிக் கணக்குகளில் பணம் வந்து குவிய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்த அந்தக் கறை படிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் புத்தளத்திற்கு வந்து இங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்ற செய்தியை புத்தளம் சமூகம் சார்பாக எத்திவைக்க விரும்புகிறோம் என்றார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...