இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றம்!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன விலக வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இன்று (31) கூடி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) 2023 ஆம் ஆண்டின் இறுதிப் பாதியில் ஊழலுக்கு எதிரான திட்டமொன்றிற்கான விலைமனுக்களை அழைத்திருந்ததுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த பின்னர், சங்கத்திற்கு 24 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது.

எவ்வாறாயினும்,  ஏலம் எடுப்பதிலும் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலும் வெளிப்படைத்தன்மையின்றி செயற்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன,  உப தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ, ஜனாதிபதி  சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, சட்டத்தரணி நுவான் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ரஷ்மினி இந்ததிஸ்ஸ ஆகியோர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...