உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Date:

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை (GCE A/L) விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 04 ஆம் திகதி முதல்  23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக மதிப்பீட்டாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் இறுதிகட்ட பணியில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...