ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Date:

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம்  முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, செப்டம்பர் 15 ஆம் திகதி 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை  கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், 3,23,879 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...