30 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியாத நிலை: தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றச்சாட்டு

Date:

வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிப்புக்கு தேவையான சட்டம் வழங்கப்படாமையால் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு சட்டமன்ற அமைப்பான நாடாளுமன்றமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது நாட்டின் கணிசமான சதவீத மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தில் நாடாளுமன்றமோ அல்லது அதிகாரிகளோ அக்கறை காட்டவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான விசாரணையின் போது தெரிவித்தார்.

கைதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கை விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடைபெறும் எனவும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...