நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தின் தலைவர் தேசமான்ய கலாநிதி ஹிரான் பீட்டரின் வழிகாட்டலுக்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சை வினாப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 99 பாடசாலைகளை சேர்ந்த 6980 மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
தரம் வாய்ந்த ஆசிரியர்களின் உதவியுடன் எதிர்பார்க்கை வினாக்கள் மற்றும் நுட்பங்களை கொண்டதாக இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தின் சமூக நல செயற்பாட்டின் ஓர் அங்கமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலவசமாக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தினால் பல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் மாணவர் மைய கல்வியை விருத்தி செய்ய ஏதுவாக அமையுமென்றும் கலாநிதி ஹிரான் பீட்டர் தெரிவித்தார்.