அல்ஹாஜ் பாக்கீர் மாக்காரின் 27ஆவது ஞாபகார்த்த தினம்: இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அலைவரிசையில் விசேட நிகழ்ச்சிகள்!

Date:

முதலாவது முஸ்லிம் ஆளுநரும், முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரின் 27ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (10) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அலைவரிசையில் மும்மொழிகளிலும் விசேட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிங்கள சேவையில் இன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உரையாற்றவுள்ளதுடன் இரவு 7.30 மணிக்கு தமிழ் சேவையில் பாராளுமன்ற நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் உரையாற்றவுள்ளார்.

அதேநேரம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இரவு 8.05 மணிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் அவர்களும் இரவு  8.45 மணிக்கு இலங்கை வானொலி ஆங்கில சேவையில் ஜனாதிபதி சட்டத்தரணி லட்டுவாஹெட்டி அவர்களும் உரையாற்றவுள்ளனர்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...