தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு வெளியான தகவல்

Date:

குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.

தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு நாட்களில் தபால் வாக்குகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், வேறு எந்த நாளையும் அதற்குப் பயன்படுத்த முடியாது என்றும், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடத்தப்படும் தினத்தில்  அதே வாக்கைப் பயன்படுத்த முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...