எலி விழுந்த தண்ணீரை பருகிய 20 மாணவர்கள்: வைத்தியசாலையில் அனுமதி

Date:

ஊவா மாகாணம் – மொனராகல மாவட்டத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதிய நேர இடைவேளையின் பின்னர், பாடசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ததாங்கியில் சேமிக்கப்பட்டுள்ள நீரையே பருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தண்ணீரை குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பாடசாலை நிர்வாகம் தண்ணீர் தொட்டியை சோதனை செய்ததில், தண்ணீர் தொட்டிக்குள் எலி இறந்து கிடந்தது தெரியவந்தது.

எவ்வாறாயினும், தண்ணீர் தொட்டியில் எலி இறந்த நிலையில் தண்ணீரை குடித்ததே இந்த ஒவ்வாமைக்கான காரணமா என்பது இதுவரை தெரியவரவில்லை.

எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...