கொழும்பில் டொலர் பத்திரங்கள் மற்றும் பங்குகள் சரிவடைந்துள்ளதாக அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க், (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.
2029 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 3.1 சதம் (cent) குறைவடையும் என்றும் இது இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு என்றும் கூறப்படுகிறது.
திங்கட்கிழமையான இன்று டொலரில் 50.2 சதங்கள் நிலவுகிறது. ப்ளூ-சிப் பங்குகளின் S&P Sri Lanka 20 சுட்டெண் ஆரம்ப வர்த்தகத்தில் 2 வீதம் சரிந்தது. ஆனாலும் ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது.
அனுரகுமார சர்வதேச நாணய நிதிதியத்துடன் 03 பில்லியன் டொலர் பிணை முறி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக முன்னாதாக உறுதியளித்தார்.
இது வாக்காளர்களை கவர்வதற்காக அவரால் வழங்பட்ட உறுதிமொழியென எடுத்துக்கொள்ளலாம்.
தற்போதுள்ள வரிகளை குறைப்பது மற்றும் அரச செலவீனங்களை குறைப்பது போன்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்கிறது.
இதேவேளை, “அனுரவின் வெற்றி என்பது இலங்கையின் பத்திரங்களுக்கு மிக மோசமான நிலைமையாகும்” என்று டெலிமிரர் அரசியல் பத்தி எழுத்தாளர்களான ஹஸ்னைன் மாலிக் மற்றும் பேட்ரிக் குரான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் 2029 ஆம் ஆண்டு டொலர் தாள்கள், இந்த காலாண்டில் சுமார் 15% சரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இது கடந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு 70% வருவாயை வழங்கியதைத் தொடர்ந்து சிறந்த திருப்பமாகும். வளர்ந்து வரும் சந்தைகளில் இது சிறந்த ஒன்றாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.