இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சிங்கள தமிழ் மொழியில் வாழ்த்து கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூலில் விசேட குறிப்பொன்றை பதிவிட்டுள்ள அவர் வாழ்த்துக் கூறியுள்ளார். இதில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அன்புள்ள இலங்கை நண்பர்களே, உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது. அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்! இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது.

நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும்.” என்றுள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...