முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
அதேநேரம் அவர் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.