இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...