AI துறையில் இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

Date:

இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த John Hopfield மற்றும் கனடாவின் Geoffrey Hinton ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் (07) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நேற்று (08) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.

விஞ்ஞானி John Hopfield, கனடாவில் வசிக்கும் பிரிட்டன் விஞ்ஞானி Geoffrey Hinton ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆர்டிபிஷியல் நியூரல் நெட் வொர்க்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மனித உடலின் செயல்பாட்டுக்கு நரம்பு மண்டலம் உறுதுணையாக இருப்பதுபோல் கணினிக்கு ஆர்டிபிஷியல் நியூரல் நெட் வொர்க்ஸை இவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இதன் மூலம் கணினியே சுயமாக தகவல்களை மனனம் செய்து தரவுகளை கற்றுக் கொண்டு செயல்படும். வெவ்வேறு தகவல்களை சேகரித்து அவற்றை வகைப்படுத்தி, எதிர்காலத்தில் என்னவெல்லாம் நிகழும் என் பதை கணித்து, முடிவுகளை தானே எடுக்கும்.

இந்த புதிய கண்டுபிடிப்பில் இயற்பியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய மூன்று துறைகளும் கூட்டாக இணைத்துப் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

 

இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கும் விஞ்ஞானி Geoffrey Hinton ‘செயற்கை நுண்ணறிவின் பிதாமகன்’ என்று போற்றப்படுபவர். அவருக்கு வயது 76. அதைவிடவும் விஞ்ஞானி John Hopfield 91 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...