பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா!

Date:

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த மற்றும் ஆணையாளர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ,...

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...