இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற பெண் எழுத்தாளர்: ‘வெற்றியை கொண்டாட மனமில்லை’

Date:

இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது.

தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.

53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ தி வெஜிடேரியன்’ [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார். இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசு வழங்கப்பட்டது.

ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன. தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை.

 

இதுபோல ‘தி ஒயிட் புக்’, ‘ஹ்யூமன் ஆக்ட்ஸ்’, ‘கிரீக் லெசன்ஸ்’ ஆகியவையும் ஹான் காங் எழுதிய மற்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.

 

தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இந்த 53 வயது எழுத்தாளரைத் தென் கொரிய அரசும் மக்களும் கொண்டாடி வருகிறனர்.

ஆனால் எந்த கொண்டாட்டங்களில் ஈடுபட ஹான் காங் விரும்பவில்லை. நோபல் பரிசு பெற்றது குறித்து எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்க மறுத்துள்ளார். இது அவரின் தீர்க்கமான முடிவு என்று ஹான் காங் தாயார் தெரிவிக்கிறார்.

உக்ரைன் மற்றும் பலஸ்தீனம் ஆகியவற்றில் நடந்துவரும் போர் தனது மகளை மிகுந்த தொந்தரவு செய்துள்ளதாக அவரது  தந்தை கூறியுள்ளார்.

 

‘போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொலை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?’ என தன் மகள் தன்னிடம் கேட்டதாக தந்தை கூறுகிறார்.

மேலும் உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை.

 

நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாக இருந்தால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நாம் எழுப்பாமல் இருக்க முடியாது ‘ என தனது மகள் கூறி   கொண்டாட்டங்களுக்கு மறுத்துவிட்டதாகத் தந்தை  கூறுகிறார்.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...