காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 33 பேர் பலி

Date:

காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் நடாத்தியது.

தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுவதுடன், இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

காசாவில் மொத்தம் 08 பெரிய அகதி முகாம்கள் உள்ளதுடன் அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...