பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த முகப்புத்தக பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த முகப்புத்தக பக்கத்திலுள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி எந்த ஒரு பயணப் பொதியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...